திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நலச் சங்கம் பொதுமக்களுக்கும் மற்றும் ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு முகாம் மாநிலத் தலைவர் அண்ணா சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பில் பொதுமக்களுக்கும் மற்றும் ஓட்டுனர்களுக்கும் 100 சதவீதம் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
இதில் ஓட்டுநர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் அமரர் உறுதி வாகனங்களுக்கு கட்டாயம் வழி விட வேண்டும்.
ஓட்டுநர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
ஓட்டுனர்கள் அனைவரும் இன்சூரன்ஸ் மருத்துவ காப்பீடு மற்றும் நல வாரியம் அவசியம் போட்டிருக்க வேண்டும்.
சாலை விதிகளை மதிக்க வேண்டும்.
இரவு நேரத்தில் ஹெட் லைட்டில் டிம் அண்டு பிரைட் செய்து வாகனம் ஓட்டிச் செல்ல வேண்டும்.
நகரங்களில் வாகனத்தை நிறுத்தி பொருள் ஏற்றும் போதும் இறக்கும்போதும் பொது மக்களுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்த வேண்டாம்.
உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பேசினார் மேலும் பெரும்பாலான வாகனங்களில் முதலுதவி பெட்டி இல்லாததால் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக வந்த இலகுரக வாகனங்கள் கனரக வாகனங்களுக்கு முதலுதவி பெட்டி தண்ணீர் பாட்டில் காலண்டர் வழங்கினார்கள்.மேலும் முகப்பு விளக்கின் நடுவில் ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.
இந்த விழிப்புணர்வு முகாமில் மாநில பொருளாளர் தம்பு இன்பராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் கருப்பையா மாநில துணை பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நல சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.