மயிலாடுதுறை நகரில் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம் மூலம் ஆறுபாதி என்ற இடத்தில் சுத்திகரிப்பு செய்து சுத்தமான நீரை சத்தியவான் வாய்க்காலில் விடுவதற்கான திட்டப்படி செயல்பாட்டிற்கு வந்தது. 2007ஆண்டில் செயல்பாட்டிற்கு வந்த இந்த திட்டத்தில் ஆறுபாதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு தேக்கி வைக்கப்பட்ட கழிவுநீர் அப்படியே சத்தியவான் வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து இப்பகுதியில் ஒன்றிய குழு உறுப்பினர் ஒன்றிய குழு கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியுள்ளார், இப்பகுதி மக்கள் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர் ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்நிலையில் ஆறுபாதி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் துவங்க வந்த அமைச்சர் சிவ வீ.மெய்ய நாதனனிடம் கோரிக்கை வைத்தனர்.
அமைச்சர் பேசுகையில் இப்பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மேடையில் உறுதி அளித்தார், நிகழ்ச்சி முடிந்து வந்த அமைச்சரிடம் சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் செல்வதை பொதுமக்கள் காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இதனிடையே இப்ப பிரச்சனை குறித்து செய்தியாளர்களை சந்தித்த அப்பகுதி ஒன்றிய உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை உடனடியாக நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிக்க உள்ளோம் என தெரிவித்தனர்