Skip to content

10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் கைது….

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மதுபான கடை ஒன்றில்  மது வாங்கி அருந்தியுள்ளார். அப்போது அந்த பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் நைசாக பேசிய மனோஜ்குமார் உனக்கு பணம் தருகிறேன் என்னுடன் வா என்று ஆசை வார்த்தை கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வைத்து சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். மேலும் சிறுவனின் உடலில் பல இடங்களில் கடித்து காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு மனோஜ்குமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதன் பின்னர் சிறுவன் வீட்டிற்கு சென்ற போது மிகவும் சோர்வாக இருந்ததால் அவனிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் தனக்கு நேர்ந்ததை கண்ணீருடன் தெரிவித்துள்ளான். அதனைத் தொடர்ந்து பெற்றோர் சிறுவனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் செய்தனர். அதனைத்தொடர்ந்து வடமதுரை போலீசார் மனோஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!