திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சம்பத் (45) தன்னுடைய வீட்டின் மேலே பேக் தைக்கும் கடை வைத்து டெய்லர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பத்து வயது சிறுமி தனது பேக் கிழிந்ததன் காரணமாக அதனை தைக்க சம்பத் கடைக்கு சென்றுள்ளார் அப்போது சம்பத் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறுகையில் அதிர்ச்சி அடைந்த தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் சம்பத்தை சிறையில் அடைத்தனர்.
இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சம்பத் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதன் காரணமாக நீதிபதி மீனா குமாரி 5ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதத்தைக் கட்ட தவறினால் 6 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன் வாதாடினார்