பாம்பனில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் 10 மீனவர்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகை இந்திய கடலோர காவல்படை கப்பல் C-432 பத்திரமாக மீட்டது. கடற்கரைக் கப்பல் மண்டபத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. மீன்பிடி படகின் ஹல் பகுதியில் ஏற்பட்ட சேதத்தால், படகில் பெருமளவு நீர் புகுந்தது, இதனால் இயந்திரம் செயலிழந்தது.
நாகை நாவூர் துறைமுகத்தில் இருந்து கடந்த 5-ம் தேதி அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற படகில், அதே நாளில்
இரவில் ஹல் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. பழுதடைந்து தவிக்கும் இப்படகு குறித்து மீன்வளத்துறையிலிருந்து தகவல் கிடைத்ததும், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையம் C-432 என்ற கப்பலை அனுப்பி வைத்தது. பாம்பன் மீன்பிடி துறைமுகம் அருகே படகு மற்றும் 10 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மீன்வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.