ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பட்டாணி கடைக்கு சென்று வறுத்த வேர்க்கடலை கேட்டு உள்ளார். 10 ரூபாய்க்கு அவர் வேர்க்கடலை கொடுத்து உள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் பணம் கொடுக்கவில்லை. கடைக்காரர் பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அவர் கடைக்காரரை மிரட்டி தகராறு செய்து உள்ளார்.
இது குறித்து கடைக்காரர் போலீசில் புகார் செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி விசாரணை நடத்தி்னார். அதில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தகராறு செய்தது உண்மை என தெரியவந்தது. எனவே அவரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார்.