காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வசூல் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியில் 11ம் தேதி ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். வழக்கில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்ப முயற்சித்து கீழே விழுந்த 4 பேருக்கும் கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது. கை, கால் முறிவு ஏற்பட்ட 4 பேரும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில்….. 10 பேர் கைது…
- by Authour
