மாணவச் செல்வங்கள், மனமார்ந்து, மனம் உவந்து ‘அப்பா, அப்பா’ என உண்மையான உணர்வோடும், உரிமையோடும் அழைக்கும் அளவில், ‘புதுமைப்பெண்’, ‘நான்முதல்வன்’, ‘தமிழ்ப்புதல்வன்’ என மாணவர்களுக்கு பல திட்டங்கள் தந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று, கரூர் மாவட்டம், கரூர் தொகுதி, மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரூபாய் 1 கோடியே 70 லட்சம் மதிப்பில் 8 புதிய வகுப்பறைகளை கொண்ட கட்டிடத்தையும், கிருஷ்ணராயபுரம் தொகுதி, கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரூ 2 கோடியே 11 லட்சம்
மதிப்பில், 10 புதிய வகுப்பறைகளை கொண்ட கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் , அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.