Skip to content

தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சிற்றம்பலம் கடைவீதியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன்,

கோ.இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, திமுக, நிர்வாகிகள் டாக்டர் வி.சௌந்தர்ராஜன், மணிவண்ணன், சக்திவேல், ராஜாங்கம், திருப்பதி, ஆரோ.அருள், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஒன்றியப் பொறியாளர் சிவக்குமார், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!