Skip to content

அமெரிக்காவில் “டிரக் அட்டாக்”.. 10 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் வெளியேறி கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சாலை பரபரப்பான மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தால் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட டிரைவர் மீது போலீசாரும் தாக்குதல் நடத்தினர். தற்சமயம் அந்த சாலையில் யாரும் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசார், புலனாய்வுக்குழுவினர் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!