வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்றம் விதித்திருத்தம், மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாகையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வருவாய்த் துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது அனைத்து
வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்றும், பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும் என்றும், மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.