4ம் கட்டமாக இன்று 96 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி வரை மேற்கண்ட தொகுதி்களில் 10.35 சதவீத வாக்குகள் பதிவானது. ஒவ்வொரு மாநிலததிலும் 2 மணி நேரத்தில் பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:
ஆந்திரா- 9.05 சதவீதம் .பீகார்-10.18 சதவீதம், ஜம்மு காஷ்மீர்- 5.07 சதவீதம் ,ஜார்க்கண்ட் -11.78 சதவீதம் ,மத்திய பிரதேசம்- 14.97 சதவீதம் ,மராட்டியம்-6.45 சதவீதம், ஒடிஷா- 9.23 சதவீதம் ,தெலங்கனா-9.51 சதவீதம், உத்தர பிரதேசம்-11.67 சதவீதம், மேற்கு வங்கம்- 15.24 சதவீதம்
9 மணி நிலவரப்படி ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 9.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஒடிசா சட்டப்பேரவை முதல் கட்ட வாக்குப்பதிவு9.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.