Skip to content

திருச்சி அம்மாமண்டபம், மேலூர், TV கோவில் பகுதிகளில் 1வாரம் குடிநீர் கட்

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறையில்  உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை அகற்றும் பணி 17.04.2025 முதல் நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான, அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர் , T.V கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் மாலை நேர குடிநீர் விநியோகம் 24.04.2025 வரை இருக்காது. காலை நேர குடிநீர் விநியோகம் வழக்கம் போல் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

25.04.2025 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர்  சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

error: Content is protected !!