நடிகர் எஸ்.வி. சேகர் 2018ல், பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டார். இது தொடா்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி நடிகர் எஸ்.வி. சேகருக்கு 1 மாதம் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாகவும், தீர்ப்பை நிறுத்தி் வைக்க வேண்டும் என்றும் எஸ்.வி. சேகர் முறையிட்டதால் 1 மாதத்திற்கு தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.