தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டாமாற்றம், கல்விகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 454 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து தமிழ்நாடு குடிசை மற்றும் வாரியம் மூலம் வழங்கப்படும் புதிய குடியிருப்பு வீட்டினை வாங்குவதற்கு ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பு காசோலையை வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித் துணைஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) தவவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.