தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனைக்காக பதிக்கு வைத்திருப்பதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் சித்தநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு முரணாக பதில் அளித்துள்ளார் அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்த பொழுது கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சூலூர் பகுதியை சேர்ந்த பப்லு குமார்(36) என்பதும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது ஒப்புக்கொண்டார் இதனை அடுத்து சுல்தான்பேட்டை போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்