கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துக்கொண்டார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதனைதொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது…
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதியில் 64,930 உறுப்பினர்களை கொண்டு 6660 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் நகர்புற பகுதியில் 86,380 உறுப்பினர்களை கொண்டு 8638 மகளிர் சுய உதவிக் குழுக்கள் என மொத்தம் 1,51,310 உறுப்பினர்களை கொண்டு ஆக மொத்தம் 17067 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனாக 2021-22 ஆம் ஆண்டில் 13171 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 769.53 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில் 13181 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 856.53 கோடியும், 2023-24
ஆம் ஆண்டில் 15324 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 923.00 கோடியும், நடப்பு நிதியாண்டிற்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன் இலக்கீடாக 1229 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை 15298 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1139.42 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2024-25 ஆம் ஆண்டில் ஊரக பகுதிகளை சார்ந்த 206 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.3.09 கோடியும், சுழல் நிதியாக 118 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.18.00 இலட்சங்களும் வழங்கப்படுகிறது.
சிறப்பு சுய உதவிக்குழுக்கள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களை ஒன்றிணைத்து 256 முதியோர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.15.00 ஆயிரம் வீதம் ரூ.38.40 இலட்சம் சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று திறனாளிகளை ஒன்றிணைத்து 122 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.15.00 ஆயிரம் வீதம் ரூ.18.30 இலட்சம் சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்று திறனாளிகள் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் மேம்பாட்டிற்காக ரூ.1.00 இலட்சம் வீதம் 96 குழுக்களுக்கு ரூ.96.00 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் கடனாக 43 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.17.20 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார நடவடிக்கைகள்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஈடுபட்டுள்ள மகளிரை கண்டறிந்து 211 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு உற்பத்தியாளர் குழுவிற்கும் இரண்டு இலட்சம் வீதம் ரூ.4.22 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இயற்கை பண்ணை தொகுப்புகள் அமைக்கப்பட்டு ரூ.26.88 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது, ஆறு இடங்களில் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள் அமைக்கப்பட்டு ரூ.72.00 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பண்ணை சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்காக சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துகடவு, ஆனைமலை மற்றும் தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களுக்கு தலா ரூ.50.00 இலட்சம் வீதம் ரூ.2.50 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பண்ணை சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒவ்வொருவரும் ரூ.50.00 ஆயிரம் முதல் ரூ.1.00 இலட்சம் வரை மிக குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.
நகர்புற வாழ்வாதார இயக்கம்….
மாநகராட்சி பகுதிகளில் நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 3431 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2860 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுழல்நிதியாக ரூ. 2.86 கோடி வழங்கப்பட்டுள்ளது. நகர்புற பகுதிகளில் 89 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு தலா ரூ.50.00 ஆயிரம் வீதம் சுழல்நிதியாக ரூ.31.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் , மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.