அரசு பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியமான ரூ. 1.29 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மற்றும் அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி. செழியன் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர். இதனை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.