10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது + 1 , +2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் எனவும் ஏற்கெனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜன. 4 ஆம் தேதி வெளியானது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதுபோல 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.