தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையமாக திருச்சி ஏர்போர்ட் உள்ளது. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. , தங்கக் கடத்தலுக்கு திருச்சி ஏர்போர்ட்டை குறிவைத்து செயல்பட்டு வரும் மாஃபியா கூட்டம் தற்போது அதிக அளவில் தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த
பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவருடைய உடைமையில் உலோக வடிவிலான பொருள் ஒன்று இருந்துள்ளது. அதனை தனியாக எடுத்து சோதனை செய்த போது, அது தங்கம் என தெரிய வந்தது.
சுமார் 501 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.