மோடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு குஜராத்தில் சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
