அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்த சிறுத்தை அருகே உள்ள நின்னியூர் காலனி தெரு அருகே கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுத்தை பிடிக்கும் கூட்டு செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் இருந்து நின்னியூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நின்னியூர் வீரன் காலனி தெருவில் கதிர்வேல், மகாராஜன்,வெங்காடசலம் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை குடிக்க வந்துள்ளது.
இந்த இடத்தில் சோளம், எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வஞ்சினாபுரம் கிராமத்தில் உள்ள ஓடை பகுதிகளில் கூண்டு வைக்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.