மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் திருக்களாச்சேரி மேலத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் (54) என்பவர் திமுக முகவராக பணியாற்றியுள்ளார். அப்போது அவர் திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவின் தந்தையும் அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் திமுகவுக்கு ஆதரவாக எப்படி வாக்கு சேகரிக்கலாம் எனக் கூறி சந்திரசேகரை சட்டையை பிடித்து அடித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து ள்ளார்.
திமுக முகவர் சந்திரசேகர் பொறையார் போலீசில் அளித்த புகாரில் . தன்னை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தாக்க முற்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மீது 171(f), 352, 506(1) 132 ஆகிய நான்கு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.