Skip to content
Home » பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை  சபாநாயகர் இன்று  நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டமன்றத்தில் கவர்னர் பேசியபோது,  அதிமுகவும்,  வேல்முருகனும் தான் பதாகைகளை காட்டி  கோஷமிட்டனர்.  வேந்தருக்கு எதிராக இவர்கள் தான் போராட்டம் நடத்தினர்.  அதே நேரதில் முதல்வர் பேசியபோது இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.   பேரவை  தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். நிறைவு பெறும்போது தேசியகீதம் பாடப்படும்.  இது தான் சட்டமன்ற மரவு. சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற முடியாது.  இப்படித்தான் நடக்கும்.  பாஜக ஆளும்  மாநிலங்களில்   எங்காவது  பிரச்னை ஏற்படுகிறதா? எனவே இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.