Skip to content
Home » பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புதினம்….பெரம்பலூரில் கொண்டாட்டடம்

  • by Authour

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு  சர்வதேச தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தனியார்  உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு,  சிறப்பு  விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில்  ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி.த.கீதா மற்றும் வழக்கு பணியாளர் ரா.ரேகா ஆகியோர்   பெண்களுக்கான சட்டம், பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
பணிபுரியும் இடங்களில்பெண்களுக்கு  பாதுகாப்பு  அளிக்க வேண்டும். பணித்தலங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக  சம்பந்தப்பட்ட போலீசில் புகார் செய்யலாம்.  இதற்காக பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் உள்ளது.   குழந்தை திருமணத்தை அரசு தடை செய்துள்ளது.  குழ்நதை திருமணம் செய்வது அதற்கு உடந்தையாக இருப்பது குற்றம்.

இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், Child line -1098, Women Help Line -181, Elder Help Line -14567, ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.

இவ்வாறு அவர்கள்  விளக்கி கூறினர். மற்றும் சமூக நலத்துறை செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அஸ்வின் ஹோம் ஸ்பெஷல்  உணவு தயாரிப்பு நிறுவனத்தின் மனித வளத் துறை மேற்பார்வையாளர்.விஜயலட்சுமி மற்றும் பெண்கள் மேற்பார்வையாளர் சசிகலா மற்றும் பணிபுரியும் மகளிர் 200 பர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *