Skip to content
Home » பா.ஜ.கவுக்கு முழுக்கு போட்ட சூர்யா சிவா….

பா.ஜ.கவுக்கு முழுக்கு போட்ட சூர்யா சிவா….

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் கடந்த சில மாதங்களுக்கு  முன் பா.ஜ.கவில் சேர்ந்தார். அங்கு அவருக்கு  பிற்பட்டோர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் அங்கு பா.ஜ. பெண் நிர்வாகி டெய்சியை போனில் தரக்குறைவாக பேசி, மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானது.

இது தொடர்பாக அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது.    இந்த நிலையில்  சூர்யா சிவா இன்று பா.ஜ.க. வில் இருந்து விலகுவதாக  அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ட்வீட்  பதவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி என்று இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *