கூடுதல் மாணவர்களை சேர்க்க, நாகையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு; அரசு தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை எம்பி மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் திறந்து வைத்தனர்;
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை டாடா நகரில் நாகை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று வகுப்பறையில் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. பள்ளி கட்டட பணிகள் அனைத்தும் முடிவடைந்தது தொடர்ந்து இன்று புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. டாட்டா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தினை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டதன் மூலம், கூடுதல் மாணவர்கள் அங்கு சேர்க்கப்பட்டு கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..