நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் 31 பேர் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் வேணுகோபால் நேற்று வெளியிட்டார்.
அந்த தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:
ப.சிதம்பரம், செல்வ பெருந்தகை , மணிசங்கர் ஐய்யர், மாணிக்கம் தாகூர், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் , திருநாவுக்கரசர் , ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ் , சுதர்சன் நாச்சியப்பன் , செல்லகுமார், கிருஷ்ணசாமி, மோகன்குமாரமங்கலம் விஷ்ணு பிரசாத், ராமச்சந்திரன், குமரிஅனந்தன் உள்பட 31 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, மேலிட தலைவர்களின் பிரசாரம், பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு அமைச்சர் கே. என். நேரு தலைைமயிலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கனிமொழி எம்.பி. தலைமையிலும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த டி ஆர் பாலு தலைமையில் ஒரு குழுவும் அமைத்துள்ளனர். அதன் விவரம்:
தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில்* அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
*தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின்* தலைவராக கனிமொழி எம்.பி. உள்ளார். உறுப்பினர்களாக டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி.,எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
*கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட அமைக்கப்பட்டுள்ள குழுவின்* தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளார். உறுப்பினர்களாக கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.