திருச்சி திமுக எம்.எல்.ஏ வீட்டு நிச்சயதார்த்தம்….. கோபத்தால் விழாவை புறக்கணித்த அமைச்சர்
திருச்சி திமுக எம்.எல்.ஏ. வீட்டு நிச்சயதார்த்த விழாவுக்கு வந்த அமைச்சர் எ.வ. வேலு கோபித்துக்கொண்டு போனார். இதனால் நிச்சயதார்த்த வீட்டார் அதிர்ச்சி. அப்படி என்னதான் நடந்தது நிச்சயதார்த்த வீட்டில் என்பதை இனி பார்ப்போம்.
பெரம்பலூர் என்றாலே தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் தான் நினைவுக்கு வரும். வறண்ட பூமியிலும், கல்வி என்றும் பெருங்கடலை உருவாக்கியவர் சீனிவாசன். இவரது ஒரே மகன் சீ. கதிரவன். பொறியியல் பட்டதாரியான இவர் தான் இப்போது தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் அதிபர்.
இந்த கல்லூரி அதிபர் கதிரவன், இப்போது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ, இவரது ஒரே மகள் நீவாணிக்கும், டாக்டர் நகுலனுக்கும் கடந்த 8ம் தேதி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள கலையரங்கில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
பல கல்லூரிகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகத்தின் வேந்தர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழா என்றால் சும்மாவா….. ஊரே மெச்சும் அளவுக்கு ஏற்பாடுகள், பல அமைச்சர்கள், விவிஐபிக்கள், அதிகாரிகள் , கல்லூரி அதிபர்கள் என ஏராளமானோருக்கு அழைப்பு.
அந்த வரிசையில் தமிழக அமைச்சரவையில் முக்கிய துறைகளுக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் எ.வ. வேலுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது..கதிரவனும் அமைச்சர் ஏவ வேலுவின் மூத்த மகன் கம்பனும் நெருங்கிய நண்பர்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு எ.வ. வே. கம்பன், மற்றொரு மகனுமான எ.வ.வே. குமரனும் நிச்சயதார்த்த விழாவுக்கு வந்திருந்தனர். அமைச்சரின் மகன்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு வந்து விட்ட நிலையில் அமைச்சர் வேலு தனியாக வந்தார். அவர் பெரம்பலூர் நெருங்கிய நிலையில் அவருக்கு முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஜூம் மீட்டிங் என கூறியதால் எ.வ. வேலு, பெரம்பலூரில் உள்ள திமுக எம்.பி ஆ.ராசா அலுவலகத்திற்கு சென்றார். விழா நடக்கும் இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் ராசா அலுவலகம் உள்ளது , முதல்வரிடம் பேசிவிட்டு நிச்சய தார்த்த விழாவிற்கு சென்று விடலாம் என எ வ வேலு நினைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வரிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, மீண்டும் நிச்சயதார்த்த விழாவுக்கு செல்லாமல் சென்னை திரும்பிய விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கதிரவன் எம்எல்ஏ வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு செல்லாமல் அமைச்சர் எ வ வேலு ஏன் சென்னை திரும்பினார். அதாவது ஏன் புறக்ணித்தார் என்பது தான் இன்று திருச்சி திமுகவில் பரபரப்பாக பேசப்படும் விவகாரம்..முதல்வர் ஏதாவது முக்கிய பணி கொடுத்திருப்பார். அதனால் போய் இருப்பார் என்றே கதிரவன் உள்ளிட்ட பலரும் நினைத்துக்கொண்டனர்.
ஆனால் எவ வேலுவின் புறக்கணிப்பிற்கு அரசியல் காரணம் என சிலரும் மகன்கள் கூறியதால் தான் அவர் வரவில்லை என சிலரும் கூறுகின்றனர். கதிரவன் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏவாக இருப்பதற்கு முக்கிய காரணம் அமைச்சர் எவ வேலு என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. எனவே எவ வேலு-கதிரவன் நட்பை பெரம்பலூர் மற்றும் திருச்சி திமுக நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. சமயம் பாத்துக்கொண்டிருந்தார்கள் . இந்த சமயத்தில் தான் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எவ வேலுவின் மகன்கள் கம்பன் மற்றும் குமரன் இருவரையும் வைத்தே எ வ வேலுவை வரவிடாமல் செய்து விட்டாரகள் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நிகழ்ச்சியில் கம்பன் மற்றும் குமரன் இருவருக்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதை சிலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இதனால் வருத்தப்பட்ட மகன்கள் தந்தைக்கு போன் செய்து எங்களுக்கு மரியாதை இல்லை என நீங்கள் வர வேண்டாம் என கூறவிட்டார்கள் என தரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினரோ ஆரம்பத்தில் இருந்தே பெரம்பலூர் ராசாவிற்கும் கதிரவனுக்கும் ஒத்துப்போகாது, சமீபகாலமாக எம்எல்ஏவின் கதிரவன் முதல்வரின் குடும்பத்தினருடன் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை திருச்சி சீனியர் அமைச்சர் நேருவும் விரும்பவில்லை. இருவரும் கொடுத்த மெசெஜ் காரணமாகவே எ வ வேலு திரும்பி சென்று விட்டார் என ஒருதரப்பினரும் பரபரப்பாக பேசுகின்றனர். எது எப்படியோ தனது வீட்டு நிச்சயதார்த்தை எவ வேலுவின் புறக்கணித்தது கதிரவனுக்கு தனிப்பட்ட மிகுந்த வருதத்தை கொடுத்திருக்கிறது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்..