Skip to content

தாம்பூல பையுடன் மது பாட்டில்……. திருமண வீட்டாருக்கு அபராதம்

புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு திருமண வரவேற்பு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள்  இதற்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது. இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *