தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக கடந்த 2021 ம் ஆண்டு மே மாதம் பழனிக்குமார் ஐஏஎஸ் பணி நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே வருகிற 28ம் தேதி உடன் பழனிகுமாரின் பதவி காலம் முடிவடைகிறது.இந்நிலையில் பழனிக்குமார் ஐஏஎஸ் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மறு நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கையை அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதில் , “இந்திய அரசியலமைப்பின் 243 கே என்னும் உறுப்பின் படியும் 1994 ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 239ம் பிரிவின் உட்பிரிவு (2) இன் கூறு (பி) இன் படியும் வெ பழனிக்குமார் ஐ ஏ எஸ் (ஓய்வு) அவர்கள் தொடர்ச்சியாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாண்புமிகு ஆளுநர் அவர்களால் மறுபடியும் பணி நியமனம் செய்யப்படுகிறார்”என கூறப்பட்டுள்ளது.
