டில்லி மேயர் தேர்தல் இன்றுநடந்தது. மொத்தம் 266 வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவைர எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர்ரேகா சர்மா 116 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றிபெற்று விடவேண்டும் என கருதிய பா.ஜ.க. ஆளுநர் மூலம் 10 நியமன கவுன்சிலர்களை நியமித்தது. ஏற்கனவே ஆம் ஆத்மிக்க 134கவுன்சிலர்களம், பா.ஜ.கவுக்கு104கவுன்சிலர்களும்,காங்கிரசுக்கு9 பேரும் உள்ளனர். இந்த நிலையில் நியமன கவுன்சிலர்கள் ஓட்டுப்போட தகுதிகிடையாது என ஆம்ஆத்மி உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் நியமனஉறுப்பினர்கள் வாக்களிக்க தடை விதித்தது.இதைத்தொடர்ந்து2முறை மேயர் தேர்தல் நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டு இன்றுநடந்து முடிந்துள்ளது.