அரியலூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் ஒரே நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த கால ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றில் அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவனையுடன கூடிய தடுப்பனை திட்டத்தை செயல்படுத்தியது அதற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தூத்தூர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கதவனையுடன் கூடிய தடுப்பணை கட்டும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்தூர் வாழ்க்கை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அதே பகுதியில் 5 இடங்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ராட்சத போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக காவல்துறையினர் அங்கேயே முகாமிட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ராட்சத போர்வெல் அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு காவல்துறையினர் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.