Skip to content

கங்கை கொண்ட சோழபுரம்… 4 லட்சம் உண்டியல் காணிக்கை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள சோழப் பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேலும் யுனெஸ்காவால் பராமரிக்கப்படும் தொன்மையான புராதன சின்னமாகவும் உள்ளது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் உண்டியல் காணிக்கை மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்னப்படுவது வழக்கம். இன்று பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், கோவிலின் செயல் அலுவலர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் பணமாக 60 ஆயிரத்து 547 ரூபாயும், சில்லறையாக மூன்று லட்சத்து 51 ஆயிரத்து 130 மற்றும் வெளிநாட்டு பணமாக இரண்டு டாலர் என மொத்தம் 4 லட்சத்தி 11 ஆயிரத்து 627 ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் 8 லட்சமாக இருந்த உண்டியல் காணிக்கை இவ்வாண்டு உண்டியல் காணிக்கை 12 லட்சமாக உயரக்கூடும் என எதிர்பார்ப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!