வடகிழக்கு பருவமழை தொடர்பாக மின்வாரிய உயர் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்வாரியம் எப்படி செயல்பட வேண்டும். அடைமழை பெய்தாலும் தடையின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். மின்தடைகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை சீரமைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே மழைக் காலங்களில் மின்வாரிய அலுவலர்கள் எக்காரணம் கொண்டும் அலைபேசியை ஆஃப் செய்து வைக்கக் கூடாது என்று மின்வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
=====
நன்றி
====
‘கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் வலைதள பதவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு கழகத்தலைவர் அவர்களுக்கும், பரிந்துரை செய்த
மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! களப்பணியாற்றி, பணிகளைத் துரிதப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மனதை வெல்லும் இந்த அற்புத வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு கழகத்தலைவரின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்வேன்!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.