தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பாக, கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கூட்டுறவுச் சங்க பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டிய சூழல், 2018ல் தேர்வானர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளதால் 2023 ஏப்ரலில் தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.