அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் , ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் வராததால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும். நீதிபதிகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம். என்றனர். அதே நேரத்தில் எடப்பாடி தரப்பினர் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றனர்.
இதைக்கேட்ட நீதிகதிகள் அனைவரும் தயாராக இருந்தால் நாங்களும் தயாராக இருக்கிறோம். பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அளித்தீர்களா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என்றனர்.
கட்சி திருத்த விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி செயல்படமுடியாத நிலை உள்ளது என எடப்பாடி தரப்பினர் கூறினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.