தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருநல்லூர் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருநல்லூர் அருள்மிகு கிரி சுந்தரி அம்மன் உடனாய அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வர் திருக்கோயில் மாசி மக பெருவிழா யொட்டி கோயில் கொடிமரத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு முன் அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பல வாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணையின் வண்ணம், ஸ்ரீ மத் கட்டளைத் தம்பிரான் வேலப்ப சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றப் பட்டது. இதில் திருக் கோயில் கண் காணிப்பாளர் கார்த்திக்கேயன், ஆய்வர் குண சேகரன், ஊராட்சித் தலைவர் கலையரசி, கிராம மக்கள் பங்கேற்றனர்.