Skip to content

இரவில் ஆட்டம்…. பகலில் சட்டம்……அமெரிக்காவில் அதிர்ச்சிசம்பவம்

  • by Authour

அமெரிக்காவில் உள்ள நியூயார்  நகர நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான கிரிகோரி ஏ. லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்து உள்ளார். தனது ஒன்லி பேன்ஸ் என்ற சேனலில் ரசிகர்களிடம் மாதம் 987 ரூபாய் ($12) வசூலித்து வந்து உள்ளார். அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து இருந்தார்.  டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்கும் கிரிகோரி, ‘நான் ஒரு நீதிபதி’ என்றும் ,காலையில் ஒரு வெள்ளை காலர் நிபுணர். இரவில் தொழில்சார்ந்தவர் என கூறி உள்ளார்.

மேலும் கிரிகோரி தன் சுயசரிதையில் ‘முதிர்ச்சியற்றவர், முரட்டுத்தனமான, ஆபாசமானவன் ‘ என்று தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் நியூயார்க் அதிகாரிகளால் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து நகர கவுன்சிலர் பெண் விக்கி பலடினோ கூறியதாவது:- இந்த நகரம் அனைத்து மட்டங்களிலும் அதன் நீதிமன்றங்களில் முழுமையான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். மேலும் லாக் போன்ற நபர்களை சட்ட அதிகார பதவிகளுக்கு நியமிப்பது நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!