By senthilvel – January 23, 2022
Share E-Tamil News
தற்போது பனிகாலம் என்பதால் அனைவருக்கும் சளி, காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று குணப்படுத்துவது அவசியம் என்றாலும், முதலில் நமது உணவு முறையிலேயே குணப்படுத்த முயற்சிக்க வேண்டும். சளி, காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணமாக மருத்துவ குழம்பு இருக்கும்.
தேவையான உணவு பொருட்கள்:
மருந்து குழம்பு செய்முறை....
முதலில் கடாயை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் பச்சரிசி, கால் ஸ்பூன் வெந்தயம்,அரை ஸ்பூன் சீரகம் மற்றும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக் எடுக்க வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, இரண்டு ஸ்பூன் தனியா, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் ஆறு வர மிளகாய், 7 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் இவற்றுடன் புளிசேர்த்து நன்றாக வதக்கி எடுத்து, ஆறவைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் 10 சின்ன வெங்காயம், 8 பல் பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் குழம்பிற்கு ஏற்ற அளவு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் பொடி சேர்த்து கலந்து விட்டு இறக்கி வைக்கவும். மூலிகை குழம்பு மணமணக்க ரெடி.....