இன்றைய திரையுலக கொரோனா...... நடிகர் ஜெயராம், எஸ்.வி.சேகர், டைரக்டர் செல்வராகவன்

By senthilvel – January 23, 2022

534

Share E-Tamil Newsதிரையுலக பிரபலங்களான மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.  இதனை தொடர்ந்து.....

நடிகர் ஜெயராமன் தனது டுவிட்டர் பக்கத்தில்.... எனக்கு கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தொிவித்து உள்ளார். 

இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில்....... எனக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று டுவிட் செய்து உள்ளார்.

திரைப்பட நகைச்சுவை நடிகராகவும், இயக்குனருமான எஸ்.வி.சேகர். அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், டாக்டரின் அறிவுறுத்தல் படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.