கடவுள்னு நான் சொல்லல... அன்னபூரணி பேட்டி..

By செந்தில்வேல் – December 30, 2021

522

Share E-Tamil Newsபேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் பெண் சாமியார் அன்னபூரணி.குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.  அவர் கடவுளின் அவதாரம் என்றும், அதிபராசக்தியின் அம்சம் என்றும் அவரது பக்தர்கள் கொண்டாடுவதாக ஒரு பக்கமும், அவர் ஜீ டிவியின் சொல்வதாம் உண்மையில் கலந்து கொண்டவர் எனவும் பரபரப்பு மீம்ஸ்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அன்னபூரணி தனது வக்கீல்களுடன் காரில் வந்தார். அவர் நிருபர்களிடம்கூறியதாவது.. நான்  தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் பரவியுள்ளன. இது பற்றி விளக்கம் அளித்து மனு கொடுக்க கமிஷனர் அலுவலகம் வந்தேன். மனுவும் கொடுத்துள்ளேன். நான் சாமியார் என்று யாரிடமும் சொல்லவில்லை. நான் சாமியார் இல்லை. ஆன்மிகவாதி. என்னிடம் வருபவர்களுக்கு ஆன்மிகம் தொடர்பாக பயிற்சி கொடுத்து, தீட்சதை வழங்குகிறேன். நான் கடவுள் அவதாரம் இல்லை. ஆதிபராசக்தியின் அம்சம் என்றும் என்னை நான் சொல்லவில்லை.. கடவுள் என்றால் யார், அவரது சக்தி என்ன, நீ யார், நான் யார் என்பது பற்றி என்னிடம் வருபவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். நான் அருள்வாக்கும் சொல்லவில்லை. எனது காலில் விழ வேண்டும் என்று யாரையும் வற்புறுத்தவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக ஆன்மிக பயணம் செய்கிறேன். எனது குடும்பம் பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை. எனது ஆன்மிக பயணம் பற்றி இப்போது எதுவும் வெளிப்படையாக பேச முடியாது. என்றார் அன்னபூரணி.. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies