ரெயில்வே போலீஸ் கொலை.. மாஜி எம்.பி.க்கு ஆயுள்...

By செந்தில் வேல் – August 9, 2022

4466

Share E-Tamil News



உத்தரபிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. உமுக்ந்த் யாதவ். 1995 பிப்ரவரி 4-ம் தேதி ரயில்வே போலீஸ் ரகுநாத் சிங் கொல்லப்பட்ட வழக்கில் உமுக்ந்த் யாதவ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ரெயில்வே போலீஸ் ரகுநாத் சிங் கொலை வழக்கில் முன்னாள் எம்.பி. உமுக்ந்த் யாதவ் உள்பட 7 பேரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதனையடுத்து, முன்னாள் எம்.பி. உமுக்ந்த் யாதவ் உள்பட 7 பேரையும் சிறையில் அடைத்தனர்.