நான் அப்டி சொல்லல... நடிகர் சூரி விளக்கம்

By செந்தில் வேல் – August 9, 2022

4474

Share E-Tamil Newsகார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, படக்குழுவினர் பற்றியும், நடிகை அதிதி செயல்பாடுகள் குறித்தும் நகைச்சுவையாக பேசினார். அதன் பின், மதுரையில் தான் பேசிய பேச்சுக்கு விளக்கமளித்தார். அதில் நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது என கூறினார். அத்துடன் நான் படிக்காதவன், அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும் எனவும் தெரிவித்தேன் எனவும் தெரிவித்தார்.