ஏராளமான சமையல் டிப்ஸ்....

By senthil – January 21, 2022

610

Share E-Tamil News பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள்.

* பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து,ஏற்றி வைத்தால், கொசுக்கள்,  பூச்சிகள் அண்டாது. 

* சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்புத் துண்டுகள் போட்டால், எறும்பு வராது. 

* கறிவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால், பூச்சிகள், வண்டுகள் எட்டிக் கூட பார்க்காது.

* வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைக்கலாம். 

* வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்து விட்டால், கண் எரிச்சல் ஏற்படாது.

* பூண்டை வெயிலில் வைத்து எடுத்தால், தோலை எளிதில் உரிக்கலாம்.

* பூண்டை எளிதில் உரிக்க இன்னொரு ஐடியா. பூண்டில் தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் அரைத்தால், தோல் அனைத்தும் மேலே எழும்பி, ஜாரின் மேற் புறத்தில் ஒட்டிக் கொள்ளும். கீழே உரித்த பூண்டு, மையாய் அரைந்திருக்கும். ஒரே நேரத்தில் இரு வேலை!

* சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகி விட்டால், நல்லெண்ணெயை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங் கள்.காரம் குறைந்து விடும், குழம்பின் வாசனையும் நன்றாக இருக்கும். 

ஆனால், குருமா போன்ற கிரேவியான ஐட்டங்களில் காரம் கூடினால், ஒரு ஸ்பூன் வெண் ணெய் போட்டு கொதிக்க வையுங்கள். காரம் குறைந்து விடும்.

* குழம்பில் புளி அதிகமாகி விட்டால், சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகி விடும்.

* சாம்பாரில் சில சமயம் பருப்பு சேராமல் நீர்க்க இருக்கும். அப் போது துவரம் பருப்பு சிறிது எடுத்து மிக்சியில் அரைத்து சாம்பாரில் சேர்த்துநன்கு கொதிக்க விடுங்கள். சாம்பார் கெட்டியாகி விடும். அரிசி மாவு கரைத்து விடுவதை விட, இவ்வாறு செய்வதுசாம்பாரின் ருசியை அதிகரிக்கும்.

* ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகி விட்டால், கறிகளின் மேல் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை தூவினால், கறியின் எண்ணெயை அரிசிமாவு உறிஞ்சிக் கொண்டு விடும்; 

கறியும் மொறு மொறுப்பாக இருக்கும். கடலை மாவும் தூவலாம்.ஆனால், கடலை மாவு சுவையை கூட்டினாலும் கறிகளுக்கு மொறு மொறுப்பை தராது.

* பாயசம் நீர்த்து விட்டால் எந்த பாயசமாக இருந்தாலும் சரி இரண்டு டீஸ்பூன் சோள மாவு அல்லது பால் பவுடர் (ப்ளெயின்) கரைத்து பாயசத்தில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விட்டால் பாயசம் கெட்டியாகி விடும்.