திருச்சி மாநகராட்சி தேர்தலில் எந்தெந்த வார்டுகளில் யார்....? யார்...? நிற்கலாம் - விவரம்

By senthilvel – January 19, 2022

534

Share E-Tamil Newsதமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. தமிழக தேர்தல் கமிஷன் இன்று அனைத்து கட்சி கூட்டம், அதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனான கூட்டமும் நடத்தி உள்ளது. இதனால் பிப்ரவரி மாதம் 17 அல்லது 21ம் தேதி நகர் புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.  இதன் காரணமாக  திருச்சி மாநகராட்சியில் இதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சியுடன் புறநகர் பகுதி சேர்க்கப்பட்டாலும், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிவடையாததால்,  தற்போது ஏற்கனவே இருந்த 65 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் ஆண், பெண், எஸ்சி பொது, எஸ்சி பெண்கள் வார்டுகள் குறித்து 2019ம் ஆண்டு வௌியிடப்பட்ட அரசு ஆணையின்படி.......

மொத்த வார்டுகள் - 65
பெண்கள் பொது    - 1, 3, 4, 7, 9, 11, 13, 18, 21, 22, 24, 26, 30, 31, 32, 33, 37, 44, 45, 49, 50, 51, 52, 53, 56, 58, 59, 63, 64
எஸ்சி பெண்கள்     - 6, 8, 15, 62
எஸ்சி பொது            - 17, 42, 65
மீதமுள்ள 29 வார்டுகள் பொது வார்டுகள் என தொிவிக்கப்பட்டுள்ளது. எஸ்டி பிரிவினருக்கு தனியாக வார்டுகள் ஒதுக்கப்படவில்லை.