By senthil – January 18, 2022
Share E-Tamil News
தேவையான பொருட்கள்.:
கொத்தவரங்காய் – கால் கிலோ, வெங்காயம் – 1,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
அரைக்க.:
தேங்காய் துருவல் – அரை கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 5,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை.:
கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும்.
இதில் வெந்த கொத்தவரங்காயைப் போட்டுக் கிளறி, அரைத்த விழுதை சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடம் கிளறி இறக்கவும்.