“தல” தோனிக்கு மூட்டு வலியாம்..... சிகிச்சை செலவு என்ன தொியுமா....? கேட்டா ஆடிப்போய்ருவீங்க....

By senthilvel – July 2, 2022

4422

Share E-Tamil News



இந்திய கிரிக்கெட் அணியில் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தோனி.  ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடியதால் தோனிக்கு மூட்டுவலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சர்வதேச அளவிலான மருத்துவமனைகளுக்கு செல்லவில்லை. மாறாக மிக மிக சாதாரண ஆயுர்வேத சிகிச்சையே எடுத்து வருகிறார்.  ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள லாபியூவ் என்ற அடர்ந்த காட்டில் வசித்து வரும் வென்டில் சிங் கேர்வால் என்ற ஆயுர்வேத மருத்துவர் தான் தோனிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இது குறித்து கேர்வால் கூறுகையில், தன்னிடம் சிகிச்சை பெற்ற தோனியின் பெற்றாேர் தற்போது நலமாக இருப்பதாகவும், கால்சியம் குறைபாடு

காரணமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனியும் தன்னிடமே சிகிச்சை பெற்று வருவதாகவும், எந்த ஆடம்பரமும் இல்லாமல் சாதாரண நோயாளி போல் வரும் தோனி, இதற்காக 4 நாட்களுக்கு ஒருமுறை 70 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து தன்னிடம் சிகிச்சை பெற்று செல்கிறார் என்றும் கூறியுள்ளார். இதற்கான மருத்துவ கட்டணம் எவ்வளவு தொியுமா....? கேட்டால் ஆடி போய்ருவீங்க.....? மருத்துவ கட்டணம் 20 ரூபாய், மருந்து கட்டணம் 20 ரூபாயும் ஆக மொத்தம் சிகிச்சைக்கு மருத்துவருக்கு டோனி கொடுப்பது 40 ரூபாய் மட்டுமே.