கூட்டணி கட்சி வரிசையில் காத்திருந்து திரௌபதி முர்முவை சந்தித்த ஓபிஎஸ்....

By senthilvel – July 2, 2022

4420

Share E-Tamil Newsதேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் திரௌபதி முர்மு இந்தியா முழுவதும் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். அவர் தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்காகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த சந்திப்பின் போது கூட்டணி கட்சியினர் வரிசையில் காத்திருந்தார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்ற பிறகு ஓபிஎஸ், வைத்திலிங்கம், எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies