விஜய்க்கு, எஸ்ஏசி கற்று கொடுத்தது என்ன தொியுமா......? திருச்சி ஆர்.கே.ராஜா பேச்சு

By senthilvel – July 2, 2022

4418

Share E-Tamil Newsவிஜய் மக்கள் இயக்கம் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. நடிகர் விஜயின் தந்தையும், பிரபல திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் 81வது பிறந்த நாள் சதாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி புத்துார் அரசு மருத்துவமனை அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.  மாநில தலைவர் ஆர்.கே.ராஜா இதனை வழங்கி தொடங்கி வைத்தார். அதற்கு முன்பாக அவர்  பேசும்போது....... தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எனக்கும் தந்தையாகவே இருக்கிறார். நடிகர் விஜய் பல்வேறு உதவிகளை எந்தவித விளம்பரமும் இல்லாமல் செய்கிறார் என்றால் அது எஸ்ஏசி கற்றுக்கொடுத்தது. நடிகர் விஜய்க்கு ஒரு காலம் வரும்,  ஒரு கடமை வரும்....அப்போது உங்களை போன்ற முதியவர்கள் எந்தவித கவலையும் இல்லாத வகையில் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தருவார். எஸ் என்றால் சேவை. ஏ என்றால் அன்பு, சி என்றால் கருணை இது மூன்றும் சேர்ந்தவர்தான் எஸ்ஏசி. எனவே அவர் பெயரில் இது போன்ற நற்காரியங்கள் தொடர்ந்து செய்வோம் என்று பேசினார். இல்லத்தில் இருந்த  முதியவர்கள்,  இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும், ஆர்.கே.ராஜாவும் நீண்ட நாள் வாழ பிராத்தனை செய்ததோடு,

வாழ்த்துக்களை தொிவித்து பின்னர் சாப்பிட்டனர். இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக மும்பை பவுல்,  புத்தூர் பிரகாஷ், உறையூர் சரண்ராஜ்,  காஜா மலை சுப்ரமணி, மலைக்கோட்டை நசீர், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு  பாச்சூர் ஆனந்த், மண்ணச்சநல்லூர் கலைவாணன், சந்தோஷ் குட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies